ஜில்லாவின் கேரள உரிமை‌யை வாங்கியது மோகன்லால் நிறுவனம்

தலைவாவுக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஜோடி, மலையாள சூப்பர் ஸ்டார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி தயாரிக்கிறார்.

நேசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்து அதற்கேற்ப பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.

இந்தப் படத்தின் மலையாள உரிமை சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. பல முன்னணி நிறுவனங்கள் படத்தை வாங்க போட்டியிட்டன. காரணம் விஜய் படத்துக்கு கேரளாவில் தனி மவுசு உண்டு.

அதோடு மோகன்லாலும் நடித்திருப்பதால் தமிழ்நாட்டை விட கேரளாவில்தான் ஜில்லாவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. போட்டியில் ஜெயித்தது மோகன்லால் பார்ட்னராக உள்ள ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம். படத்தின் உரிமைத் தொகை பற்றி தகவல் வெளியிட மறுத்துவிட்டார்கள்  
Share on Google Plus